பீஷ்மர், சுபிக்ஷா
ஊத்தங்கரை அருகே பரிதாபம்:ரெயில் முன் பாய்ந்து மகன் மகளுடன் தாய் தற்கொலை
- ெரயில் முன் பாய்ந்து அம்மு தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
- ஊத்தங்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுதெரு பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தை என 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இைடயே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதில் மனமுடைந்த அம்மு தனது மூத்த 3 குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின் தனது கடைசி இரண்டு குழந்தைகளான பெண் குழந்தை சுபிக்ஷா (7), ஆண் குழந்தை பீஷ்மர் (5), ஆகியோருடன் ஊத்தங்கரை அருகேயுள்ள ரெயில் தண்டவாளம் அருகில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் செல்லக்கூடிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயில் முன் பாய்ந்து அம்மு தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ெரயில்வே துறையினர் மற்றும் கல்லாவி காவல் துறையினர் சம்பவ இடத்தில் விரைந்து வந்தனர். ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பீஷ்மர் மற்றும் தாய் அம்மு ஆகியோர் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுத்தனர். மேலும் மகள் சுபிஷாவின் உடல் கிடைக்காததால் தேடி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த பெண் குழந்தையின் உடல் தேடும் பணியில் கல்லாவி போலீசார் மற்றும் இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே ரெயில் முன் பாய்ந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.