உள்ளூர் செய்திகள்

லாரிகள் அணிவகுத்து நின்ற காட்சி.

வேப்பூரில் பழுதாகி நின்ற லாரியால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-11-11 12:39 IST   |   Update On 2022-11-11 12:39:00 IST
  • அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையிலே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
  • வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தத்தளித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூரில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லோடு லாரி சர்வீஸ் சாலை துவக்கத்திலேயே பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டதால் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையிலே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் திருச்சிக்கு செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில் திருப்பி அனுப்பியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனால் அனைத்து வாகனங்களும் சுமார் 5 மணி நேரம் நகரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தற்போது வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இரவு முழுக்க மழை பெய்து கொண்டே இருந்த சூழ்நிலையில் சர்வீஸ் சாலை முழுக்க மழை நீர் தேங்கி நின்றததால் அதில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தத்தளித்து சென்றது குறிப்பிடத்தக்கது எனவே மேம்பால பணியை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News