உள்ளூர் செய்திகள்

திருமங்கலத்தில் 16-ந்தேதி போக்குவரத்து மாற்றம்

Published On 2022-10-14 08:47 GMT   |   Update On 2022-10-14 08:47 GMT
  • அம்பத்தூர், ஆவடி நோக்கி செல்லும் வாகனங்கள், மாநகர பேருந்துகள் பாடி மேம்பாலம் டி.வி.எஸ். லூக்காஸ் பிரிட்டானியா கம்பெனி வழியாக செல்ல வேண்டும்.
  • திருமங்கலம் அண்ணாநகர் செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் டி.வி.எஸ். லூக்காஸ் பிரிட்டானியா கம்பெனி வழியாக 100 அடி சாலை வழியாக செல்ல வேண்டும்.

சென்னை:

திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்டேட்ரோடு நிழற்சாலையில் வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) "பொழுது போக்கு தெரு" என்ற நிகழ்வு நடைபெற இருப்பதால் ஆபிசர் காலனி சந்திப்பு முதல் டி.ஏ.வி. நிழற்சாலை சந்திப்பு வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

திருமங்கலத்திலிருந்து எஸ்டேட் ரோடு கோல்டன் பிளாட் வழியாக அம்பத்தூர், ஆவடி நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் பாடி மேம்பாலம் டி.வி.எஸ். லூக்காஸ் பிரிட்டானியா கம்பெனி வழியாக செல்ல வேண்டும்.

திருமங்கலத்திலிருந்து ஜெ.ஜெ. நகர் முகப்பேர் மேற்கு நோக்கி செல்லும் வாகனங்கள் வளையாபதி சாலை வழியாக வலது புறம் திரும்பி பாரி சாலை வழியாக வலது புறம் திரும்பி திருவள்ளூர் சாலை வழியாக செல்லலாம்.

ஆவடி, அம்பத்தூர் ஓ.டி.யிலிருந்து கோல்டன் காலனி வழியாக திருமங்கலம் அண்ணாநகர் செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் டி.வி.எஸ். லூக்காஸ் பிரிட்டானியா கம்பெனி வழியாக 100 அடி சாலை வழியாக செல்ல வேண்டும்.

Tags:    

Similar News