போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
தாடிக்கொம்புவில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு
- தாடிக்கொம்பு நிறுத்தம் சாலைகளில் இருபுறங்களிலும் சிக்கன் கடை, பாஸ்ட்புட் கடை, ஹோட்டல் போன்றவற்றை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
- ஆக்கிரமிப்பு செய்துவரும் கடைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத நிலையை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு பாலத்தின் இரு புறங்களிலும் தாடிக்கொம்பில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலை, தாடிக்கொம்பிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலை ஆகிய இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.
இதனால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவமாணவிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள்மிகவும் சிரமப்படுகின்றனர்.
சாலைகளில் இருபுறங்களிலும் சிக்கன் கடை, பாஸ்ட்புட் கடை, ஹோட்டல் போன்றவற்றைவைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம், நீதிமன்றம் என பல்வேறு முக்கிய அலுவலகங்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்காக வருபவர்கள் அடிக்கடி சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் முக்கிய பூஜைகள் நடைபெறும் நாட்களில் பக்தர்களும் நெரிசலில் சிக்கி மாட்டி கொள்கின்றனர்.
எனவே தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்துவரும் கடைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத நிலையை ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.