உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்
- சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
- விதிகளை மீறும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறை அபராதம் விதிக்க வேண்டும்.
ஊட்டி
ஊட்டி கூடலூர் சாலையில் தலைகுந்தா பகுதியில் அமைந்துள்ள பைன் மரக் காடு, பலநூறு ஆண்டுகள் பழமையான பைன் மரங்களின் தோப்பாகும்
இந்த இடம் திரைப்படங்கள் மூலம் பிரபலமான சுற்றுலா தலம் ஆகும். இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
மேலும் காமராஜர் அணை உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் விதியை மீறிய செயலில் ஈடுபட்டு வருகின்றனர் ஆபத்தை உணராமல் புகைப்படங்களை எடுப்பது அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள பாறையின் மேல் அமர்ந்து புகைப்படம் எடுப்பது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
உயிர் சேதத்தை தவிர்க்கும் வகையில் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க வனதுறை தடை விதிக்கும் அறிவிப்பு பலகைகளை வைப்பதோடு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்