உள்ளூர் செய்திகள்

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்று.

சாரல் மழையுடன் இதமான சீதோசனம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2023-04-02 07:58 GMT   |   Update On 2023-04-02 07:58 GMT
  • நேற்று இரவுவரை பரவலாக மழை பெய்ததால் இதமான சீதோசனம் நிலவியுள்ளது.
  • சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிசாலையில் சைக்கிள் ரைடிங், குதிரை சவாரி என மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடை க்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதமான சீதோசனமும், கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களும், தலை முட்டும் மேகமூட்டமும் காணப்படுவதால் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்து இயற்கை எழில்கொஞ்சும் சூழலை அனுபவித்து ரசிக்கின்றனர்.

மேலும் சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜாதோட்டம், தாவரவியல் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் காண ப்பட்டனர். செண்பகனூர், அப்சர்வேட்டரி, நாயுடுபுரம், சின்னபள்ளம், பிரகாசபுரம், பெரும்பள்ளம், குருசடிமெத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவுவரை பரவலாக மழை பெய்ததால் இன்று இதமான சீதோசனம் நிலவியுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டகானல் அருவி, பாம்பார் அருவி, செண்பகா அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது.

சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிசாலையில் சைக்கிள் ரைடிங், குதிரை சவாரி என மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர். தற்போது கொடை க்கானலில் பெய்துவரும் சார ல்மழையால் குளுமையான சீதோசன நிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் இன்று விடுமுறை நாளாக இருப்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

Tags:    

Similar News