உள்ளூர் செய்திகள்

புல்லாவெளி நீர்வீழ்ச்சி (கோப்பு படம்)

புல்லாவெளியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் வனத்துறை கட்டுப்பாட்டால் வெறிச்சோடிய அருவி

Published On 2022-10-29 05:21 GMT   |   Update On 2022-10-29 05:21 GMT
  • கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
  • இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். வனத்துறையினர் எச்சரிக்கையை மீறிச்சென்றதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாறை:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நகர் பகுதியில் சுற்றுலா இடங்களை அவர்கள் கண்டுகளித்தபோதும் இயற்கை எழில்கொஞ்சும் மலைப்பகுதியில் ஓய்வெடுக்க ஆர்வம்காட்டுகின்றனர்.

இதனால் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களுக்கு அவர்கள் படையெடுத்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக ெகாடைக்கானலில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆப்பரித்து கொட்டுகிறது. மேலும் புதிய அருவிகளும் உருவாகி உள்ளன.

கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மலைகளுக்கு இடையே வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதில் சிலர் மதுஅருந்துவது உள்ளிட்ட சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது உள்ளிட்டவைகளில் ஈடுபடுவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டது. கடந்த சில வருடங்களில் 15-க்கும் மேற்பட்டவர்கள் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து வனத்துறை சார்பில் ஆபத்தான பகுதி எனவே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி சிலர் ஆபத்தான முறையில் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவதானப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை காட்டி கொடுத்த வாலிபரை கடத்திச்சென்று புல்லாவெளியில் கொன்று வீசினர்.

இதனைதொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். மேலும் ஆபத்தான முறையில் இருந்த பாலத்தையும் வேலி கட்டி சுற்றுலா பயணிகள் செல்லமுடியாதவாறு தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும் அவ்வப்போது அருவியில் ரோந்து சென்று தகாத செயல்களில் ஈடுபடுகின்றனரா என கண்காணித்து வருகின்றனர். இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,

விடுமுறையை கொண்டாட மலைப்பகுதிக்கு வருகின்றனர். ஆனால் அதுவே அவர்களுக்கு ஆபத்தாக முடிந்துவிடக்கூடாது. இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். வனத்துறையினர் எச்சரிக்கையை மீறிச்சென்றதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளோம். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News