உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் கலியுக வரதராஜபெருமாள், தரிசனத்துக்காக குவிந்த பக்தர்கள்.

இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை; பெருமாள் கோவில்களில் தரிசனத்துக்காக குவிந்த பக்தர்கள்

Published On 2022-10-08 15:32 IST   |   Update On 2022-10-08 15:32:00 IST
  • பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
  • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மனம் உருகி பெருமாளை தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்:

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பிரசித்தி பெற்றவை.

இன்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை என்பதால் தஞ்சை தெற்குவீதியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது.

அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிய தொடங்கினர். பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மனம் உருகி பெருமாளை தரிசனம் செய்தனர்.

இதே போல் கொண்டிராஜபாளையம் யோகநரசிம்ம பெருமாள் கோவில், நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மானம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், நீலமேக பெருமாள் , நரசிம்ம பெருமாள், மேல ராஜா வீதி நவநீதகிருஷ்ணன், கீழ ராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளி அக்ரஹாரம் கோதண்ட ராம பெருமாள் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News