சேலத்தில் இன்று ஆன்மீக அமைப்பினர் ஆலோசனை
- திருமணிமுத்தாறு நதியின் புனிதம் போற்றும் வகையில் இந்த நதிக்கு மகா ஆரத்தி விழா நடத்த ஆன்மீக அமைப்புகள் திட்ட மிட்டுள்ளன.
- ஏற்காடு மலையில் திருமணத்தாறு பயந்துவிடும் இடமான வசம்பாடி அருவி யில் அன்று காலை 8 மணிக்கு மகா ஆரத்தி நடக்கிறது.
சேலம்:
சேலம் திருமணிமுத்தாறு நதியின் புனிதம் போற்றும் வகையில் இந்த நதிக்கு மகா ஆரத்தி விழா நடத்த ஆன்மீக அமைப்புகள் திட்ட மிட்டுள்ளன. இதையடுத்து வருகிற 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மகா ஆரத்தி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன.
ஏற்காடு மலையில் திருமணத்தாறு பயந்துவிடும் இடமான வசம்பாடி அருவி யில் அன்று காலை 8 மணிக்கு மகா ஆரத்தி நடக்கிறது. தொடர்ந்து துறவிகளோடு சென்று திருமணிமுத்தாறு ஆற்றங்கரைகளில் உள்ள சேலம் சுகவனேஸ்வரர் கோவில், உத்தமசோழபுரம் கோவில் கரபுரநாதர் கோவில், பில்லூர் ஸ்ரீ வீரட்டீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஸ்வரர் கோவில், நஞ்சை இடையாறு திருவேலீஸ்வரர் கோவில் ஆகிய 5 சிவாலயங்களில் தரிசனம் செய்யப்படுகிறது.
பின்பு மாலை 7 மணிக்கு சேலம் சுகவனேஸ்வரர் கோவில் முன்பு உள்ள பஞ்சாட்சர கணபதி கோவில் அருகில் திருமணிமுத்தாறு நதியில் மகா ஆரத்தி நடை பெறுகிறது. இந்த மகா ஆரத்தி திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகில் உள்ள ஏ.வி .ஆர். கல்யாண மண்டபத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் தெய்வீக தமிழ் சங்கம் அறக்கட்டளை, அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் ஆன்மிக, இலக்கிய, சமூக அமைப்புகள், அறக்கட்டளையினர், சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் பங்கேற்கின்றனர்.