உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்கள் கடத்தியவர்கள் கைது
- இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
- மகேஷ்குமார், அசோக்,சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் எர்ரண்டப்பள்ளி பகுதியில் சூளகிரி போதை பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர்களை மடக்கி சோதனை செய்தபோது ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து புகையிலை பொருட்கள்மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் எர்ரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த மகேஷ்குமார், அசோக்,சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.