உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு புகையிலை குறித்த விழிப்புணர்வு நடைபெற்ற காட்சி.

பல்லடம் அரசு பள்ளியில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-06-25 11:32 GMT   |   Update On 2022-06-25 11:32 GMT
  • புகை பழக்கம் காரணமாக உலகம் முழுவதும் தினமும் சுமார் 2,000 பேர்வரை இறக்கின்றனர்.
  • புகை பழக்கத்திற்கு செலவிடும் பணத்தை உங்களுக்கு சேமிக்க சொல்லுங்கள்.

பல்லடம் :

பல்லடத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .

பல்லடம் அரசு பெண்கள்மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பாக புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நலகல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.தலைமையாசிரியர் காஞ்சனா வரவேற்றார். புகையிலை பாதிப்புகள் குறித்து பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி பேசியதாவது:- புகையிலை பழக்கமுள்ள நபரை மீட்க கவுன்சிலிங் அவசியம். புகைப்பிடிப்பதன் மூலம் என்ன விளைவு ஏற்படுகிறது என்னென்ன நோய்கள் ஏற்படுகின்றன என்று இங்கு நீங்கள் கேட்டதை வீட்டில் உள்ளவர்களிடம் கூறுங்கள். புகை பழக்கத்திற்கு செலவிடும் பணத்தை உங்களுக்கு சேமிக்க சொல்லுங்கள். புகை பழக்கம் காரணமாக உலகம் முழுவதும் தினமும் சுமார் 2,000 பேர்வரை இறக்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார். பின்னர் ஆசிரியர்கள், மாணவர்கள், அனைவரும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News