ஊத்தங்கரை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைத்த இளைஞர்.
ஊத்தங்கரை வட்டாட்சியரிடம் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்தது ஏன்?- வாலிபரின் பரபரப்பு விளக்கம்
- சில நாட்களுக்கு முன்பு இவரை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாகவும் இதனால் மனமுடைந்து காணப்பட்டார்.
- ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் அட்டை, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை குடும்பத்துடன் வந்து குமார் ஒப்படைத்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவருக்கும் பல நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் கவுன்சிலர் தொடர்ந்து குமாருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், தொழில் ரீதியாக துன்புறுத்துவதாகவும், மேலும் தன்னை பார்க்க வரும் நண்பர்களை அவதூறாக பேசுவதும் தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார்.
பின்னர் சில நாட்களுக்கு முன்பு இவரை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாகவும் இதனால் மனமுடைந்து ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் அட்டை, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை குடும்பத்துடன் வந்து குமார் ஒப்படைத்தார். மேலும் கவுன்சிலர் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
வட்டாட்சியர் அவரிடம் இந்த மனு தொடர்பாக ஊரில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு தவறுகள் நடந்திருப்பது உறுதியாகும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளதாக கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.