உள்ளூர் செய்திகள்

தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

மேட்டுப்பாளையத்தில் மானாவாரி மேம்பாட்டு இயக்க தொழில்நுட்ப பயிற்சி

Published On 2022-06-29 08:58 GMT   |   Update On 2022-06-29 08:58 GMT
  • மேட்டுப்பாளையத்தில் மானாவாரி மேம்பாட்டு இயக்க தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
  • மண் வளம், சமுக காடுகள் அமைத்தல் போன்ற காரணிகள் குறித்து பயிற்சிகளை வழங்கினார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம், மேட்டுப்பாளையம் கிராம விவசாயிகளுக்கு, 'முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்'' குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பயிற்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில், விவசாயிகளுக்கு மானாவாரி நில மேம்பாடு மற்றும் மானாவாரிக்கு ஏற்ற பயிர் இரகங்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், மண் வளம், சமுக காடுகள் அமைத்தல் போன்ற காரணிகள் குறித்து பயிற்சி வழங்கினார்.

பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் (ஓய்வு)மாதேஸ்வரன், பயிற்சியில் கோடை காலத்தில் கிடைக்கும் மழை நீரைப் பயன்படுத்தி உழவு செய்வதால், மண்வளத்தை மேம்படுத்தலாம். மண் அரிமானம் தடுக்கப்பட்டு, காற்றோட்டம் கிடைக்கும். அடுத்தடுத்து பொழியும் மழைநீர் வீணாகாமல், அந்த நிலத்திலேயே உறிஞ்சப்படுவதால், மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுகிறது. பயிர் சுழற்சி, பருவப்பயிர்கள், சிறுதானியப்பயிர்கள் மற்றும் அருந்தானியப்பயிர்கள் பயிரிடுவதன் மூலம் குறைந்த நாளில் அதிக மகசூல் அதிக லாபம் பெறலாம் என பயிற்சி வழங்கினார்.

இதில் உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதி, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், தமிழக முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்பு பருவ பயிருகளுக்கான மானியத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தனர். 

Tags:    

Similar News