உள்ளூர் செய்திகள்

சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வசதியாக சேலத்தில் பணிபுரியும் கர்நாடக தொழிலாளர்களுக்குநாளை விடுப்பு வழங்க அதிகாரி உத்தரவு

Published On 2023-05-09 15:00 IST   |   Update On 2023-05-09 15:00:00 IST
  • கர்நாடகாவில் நாளை சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிரது.
  • சேலம் மாவட்டத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பலர் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள்.

சேலம்:

கர்நாடகாவில் நாளை சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிரது. சேலம் மாவட்டத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பலர் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தேர்தலில் தங்கள் வாக்குரிமையை செலுத்தும் விதமாக அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சேலம் தொழிலாளர் ஆணையாளர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ல செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு, போக்குவரத்து நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நூற்பாலைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களில் பணிபுரியும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாக்குரிமையுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்தில் எவ்வித பிடித்தமும் செய்யாமல் விடுமுறை அளிக்கப்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News