உள்ளூர் செய்திகள்

போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள வேலைவாய்ப்பு அலுவலர் அறிவுரை

Published On 2023-02-01 15:25 IST   |   Update On 2023-02-01 15:25:00 IST
  • தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது.
  • போட்டி தேர்வில் எதிர்கொள்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுகிறார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது.

இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் பேசியதாவது:-

வாழ்க்கையில் வெற்றி பெற தன்மைபிக்கையே முக்கியம். போட்டி தேர்வுகளில் வெற்றியை தீர்மானிக்க திறமைசாலி, அறிவாளியாக இருக்க வேண்டும் என்பது அல்ல. தொடர் முயற்சியில் இருந்தால் வெற்றி நிச்சயம்.

அரசு வேலை என படிப்பவர்கள், சேவை செய்யும் என்கிற எண்ணத்துடன் படிக்க வேண்டும். குறிப்பாக தன் குடும்பத்தையும், சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என்கிற நோக்கில் போட்டி தேர்வில் எதிர்கொள்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுகிறார்கள்.

நீ என்னவாக ஆக நினைக்கிறாயோ, அதுவாகவோ ஆகிறாய். நீங்கள் தேர்வு என நினைத்து அச்சம் அடைந்தால், அச்சம் உங்களை சூழந்து கொள்ளும். மாறாக அச்சமின்றி எதிர் கொள்ள துணிந்தால், எளிதாக தேர்வினை எழுதலாம். கடமையை, கடமையாக செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி.

எனவே, கல்லூரி மாணவிகள் படிக்கும் போதே, போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள தங்களை தயார் செய்துக் கொள்ளுங்கள். கல்லூரி படிப்பிற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தால், உங்களது நோக்கம் நிறைவேறாது.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News