உள்ளூர் செய்திகள்

ஓடும் அரசு பஸ்சில் தம்பதியிடம் 12½ பவுன் தங்க நகைகள் திருட்டு

Published On 2022-11-06 14:13 IST   |   Update On 2022-11-06 14:13:00 IST
  • உறவினர் திருமணத்திற்கு செல்ல தனது மனைவியுடன் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
  • அவர் வைத்த டிராவல் பேக் மாயமானது.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 52). இவர் நேற்று மாலை 6 மணி அளவில் தர்மபுரியில் நடைபெறும் உறவினர் திருமணத்திற்கு செல்ல தனது மனைவியுடன் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஓசூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி இருக்கைக்கு மேலே உள்ள லக்கேஜ் வைக்கும் இடத்தில் தான் கொண்டு வந்த 12½ பவுன் தங்க நகைகள் வைக்கப்பட்ட டிராவல் பேக்கை வைத்தார்.

தர்மபுரி அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் வைத்த டிராவல் பேக் மாயமானது.இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் உடனடியாக அங்கிருந்து நேராக சேலம் வந்து பள்ளப்பட்டி போலீசில் நகை மாயமானது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்சில் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

நகை பறிகொடுத்த பாஸ்கரன் ஆத்தூர் முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத்தின் உறவினர் ஆவார்.

Tags:    

Similar News