உள்ளூர் செய்திகள்

பால் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி- தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

Published On 2022-07-17 15:21 IST   |   Update On 2022-07-17 15:21:00 IST
  • பால் பொருட்களுக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது.
  • சாமானிய மக்களை பாதிக்கும் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

சென்னை:

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் கே.எம்.கமாலுதீன் விடுத்துள்ள அறிக்கையில்,

கடந்த மாதம் நடைபெற்ற 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பால் பொருட்களை 5 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வருவது என ஒன்றிய அரசு முடிவெடுத்தபோது அத்தியாவசிய பால் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது அவ்வாறு கொண்டு வரும்பட்சத்தில் அவற்றின் விற்பனை விலை கடுமையாக உயரும், அதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் பால் பொருட்களுக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி நாளை (18-ந்தேதி) முதல் அமலுக்கு வருவதையொட்டி அன்றைய தினமே தயிரின் விலையை அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

எனவே சாமானிய மக்களை பாதிக்கும் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News