பக்தர்கள் பால்குடம் எடுத்து செல்லும் காட்சி.
- கோவில்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
- ஏராளமானோர் பங்கேற்பு
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள விநாயகபுரம் கிராமத்தில் உலக நன்மை வேண்டி விநாயகர், சிவன், அனுமன், ஆகிய கோவில்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
காலையில் சிவன், அனுமன், விநாயகர் ஆகிய சுவாமிகளுக்கு பல்வேறு மூலிகைகள் மூலம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைத்து, உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் விரதமிருந்த 208 சுமங்கலிப்பெண்கள் விநாயகர் கோவிலில் இருந்து தலையில் பால், குடங்களை சுமந்து கொண்டு பல்வேறு வேண்டுதல்களை வேண்டி ஊர்வலமாக ருத்ரகிரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று. ருத்ரகிரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விநாயகபுரம் கிராம பொதுமக்கள், பெரியவர்கள், இளைஞர்கள், செய்திருந்தனர்.