உள்ளூர் செய்திகள்

பெரிய அய்யம்பாளையம் கோவிலில் விஷ்ணு தீபம்

Published On 2022-12-08 15:31 IST   |   Update On 2022-12-08 15:31:00 IST
  • பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது
  • சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் உத்தமராய பெருமாள் கோயிலில் நேற்று 7-ந்தேதி விஷ்ணு கார்த்திகை தீப விழா முன்னிட்டு பூதேவி ஸ்ரீதேவி சமேத உத்தமராய பெருமாளுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து திருவீதி உலாவுக்குப் பின் மந்தைவெளி பகுதியில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர். மேலும் கார்த்திகை தீபம் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு தீபமேற்றி வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News