உள்ளூர் செய்திகள்
பெரணமல்லூர் ஒன்றிய குழு கூட்டம்
- நிதி கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டது
- பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதம்
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், தலைமை வாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம், ஒன்றிய குழு துணை தலைவர் லட்சுமி லலிதா, பெரணமல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாராயண மூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் அலுவலக மேலாளர் பாஸ்கர் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய பொது நிதி கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டது.
மேலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அனைத்து கிரா மங்களிலும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள் உள்பட கலந்து கொண்டனர்.