உள்ளூர் செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்த காட்சி.
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா
- 40 ஆண்டுக்கு பிறகு நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்தி கடன் செலுத்தினர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் மிகவும் பழமையவாய்ந்த ஸ்ரீ திரவுபதி அம்மன் அக்னி வசந்த விழா கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.
மேலும் கடந்த 27 நாட்களாக அருள்மிகு ஸ்ரீ திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த விழாவில் பால்குடம் ஏந்தி பக்தர்கள் திரவுபதி அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றும் விதமாக காப்பு கட்டி விரதம் இருந்துள்ளனர். அம்மன் கோவில் வளாகத்தில் கட்டைகளை கொண்டு தீயிட்டு கொளுத்தினர்.
கோவிலிருந்து மூலவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உற்சவ சிலையை பக்தர்களுக்கு ஏந்தியவாறு தீ மிதித்து வழிபட்டனர்.
இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீமிதி திருவிழாவை கண்டுகளித்தனர்.