உள்ளூர் செய்திகள்

செங்கம் காக்கங்கரை விநாயகர் கோவில் முன்பு சேதமடைந்த கம்பிகள் புதிதாக அமைக்க வேண்டும்

Published On 2023-02-18 14:33 IST   |   Update On 2023-02-18 14:33:00 IST
  • பக்தர்கள் அவதி
  • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

செங்கம்:

செங்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாக்கங்கரை விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் தினமும் நூற்றுக்கணக்கானோர் காலை மற்றும் மாலை வேலைகளில் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாயின் மீது இரும்பு கம்பிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த இரும்பு கம்பிகள் பல வருடங்களாக பரா மரிப்பின்றி உள்ளது. இந்நிலையில் பராமரிப்பு இல்லாமல் உள்ள இந்த இரும்பு கம்பிகள் துருப்பிடித்தும் வளைந்தும் சில இடங்களில் அகலமான பள்ளங்கள் ஏற்பட்டும் காட்சியளிக்கிறது.

கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தவறுதலாக சேதமடைந்துள்ள இரும்பு கம்பிகளில் கால் சிக்கிக் கொண்டு கீழே விழும் நிலை ஏற்படுகிறது. மேலும் சரக்கு வாகனம் இந்த கம்பியின் மீது ஏறியதில் வளைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இரும்பு கம்பிகளை மாற்றி புதிதாக அமைத்து அச்சமின்றி பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News