உள்ளூர் செய்திகள்
பழ வியாபாரி வீட்டில் நகை பணம் திருட்டு
- பூட்டை உடைத்து கைவரிசை
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிபட்டு மன்னம்மாள் நகரைச் சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 59). இவர் திருவண்ணாமலையில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
காலையில் விற்பனைக்கு சென்று இரவு தான் வீடு திரும்புவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் வியாபாரத்துக்கு மனைவியுடன் முருகதாஸ் வெளியே வந்து விட்டார். பின்பு இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை பார்த்து முருகதாஸ் அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் 30 ஆயிரம் திருடு போனது தெரியவந்துள்ளது.
இது குறித்து திருவண்ணா மலை தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.