உள்ளூர் செய்திகள்

கிணற்றில் சிக்கித் தவித்த முத்துக்குமரனை தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் பத்திரமாக மீட்டபோது எடுத்த படம்.

விவசாயி கிணற்றில் மூழ்கி தவிப்பு

Published On 2022-10-20 14:50 IST   |   Update On 2022-10-20 14:50:00 IST
  • கன்றுக்குட்டியை மீட்க முயன்ற போது விபரீதம்
  • தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு அடுத்த அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 30). விவசாயி. இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீட்டின் அருகே விவசாய நிலம் உள்ளது. அந்தப் பகுதியில் கிணறு ஒன்று உள்ளது.

இந்த நிலையில் கன்றுக்குட்டி கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தது.

இதனைக் கண்ட முத்துக்குமரன் அக்கம்பக்கம் உதவியோடு கிணற்றில் குதித்து கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டு மேலே அனுப்பி வைத்தார்.

கிணறு ஆழமாக இருந்ததால் கிணற்றிலிருந்து முத்துக்குமரனால் மேலே வர முடியவில்லை.

பொதுமக்கள் இவரை மீட்க முடியாததால் இது குறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த முத்துக்குமரனை கயிறு மூலம் நீண்ட நேரம் போராடி அவரை பாதுகாப்பாக மீட்டனர்.

Tags:    

Similar News