தரையில் அமர்ந்து தாசில்தார் திடீர் போராட்டம்
- பணியிடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு
- சேத்துப்பட்டு தாசில்தார் அலுவலகம் முன்பு பரபரப்பு
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு தாசில் தாராக கடந்த 53 நாட்க ளுக்கு முன்பு பாலமுருகன் பதவி ஏற்றார். இவர் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு இல்லாமல் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
பொது மக்கள் கொடுக்கும் மனுக் கள் மீது முறையாக நடவ டிக்கை மேற்கொள்ளாமல் அலுவலர்களின் ஒத்து ழைப்பு இல்லாமல் தானா கவே சான்றுகள் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த அதி காரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் புகார் மனு கொடுத்த இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை தாசில்தார் பாலமுருகன் செய்யாறு சிப்காட் தாசில்தாராக திடீர் மாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக செய்யாறு சிப்காட் தாசில்தாராக பணிபுரிந்து வந்த சசிகலா சேத்துப்பட்டு தாசில்தாராக மாற்றப் பட்டார். பொறுப்பு ஏற்பதற்காக நேற்று மாலை சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு சசிகலா வந்தார்.
இதனால் கடுப்பான தாசில்தார் பாலமுருகன் நேற்று மாலை சேத்துப்பட்டு தாலுகா அலுவலக வளா கத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த சேத்துப் பட்டு போலீசார் தாலுகா அலுவலகம் வந்து பாது காப்பு பணியில் ஈடுபட்ட னர். புதிய தாசில்தாராக பதவி ஏற்க வந்த சசிகலா தாலுகா அலுவலகத்தில் வரமுடியாமல் வெளியில் பல மணி நேரம் காத்து நின்றார். பின்னர் தாசில்தார் பால முருகன் நிலைப்பாடு குறி த்து அலுவலக ஊழியர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் தாசில்தார் பாலமுருகன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிந்து குடும்பத் தார் வந்து சமாதானம் செய்து அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர். இச் சம்பவத்தால் நேற்று மாலை சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.