ஆரணி சப்- கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்த காட்சி.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் போராட்டத்தில் ஈடுபட கூடாது
- கலெக்டர் முருகேஷ் பேச்சு
- கணவனால் கைவிடபட்ட பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் காசோலை வழங்கினார்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள ஆரணி சப்- கலெக்டர் அலுவலகத்தை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டெர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சப்- கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனையடுத்து விபத்து மற்றும் கணவனால் கைவிடபட்ட 5 பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் காசோலையை கலெக்டர் முருகேஷ் பயனாளிகளிடம் வழங்கினார் பின்னர் நிறுபர்களிடம் அவர் கூறியதாவது:-
மாணவர்கள் தப்பு செய்தாலும் ஆசிரியர்கள அடிக்க கூடாது மாணவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு அடித்திருக்ககூடாது. பெற்றோரிடம் ஆசிரியர்கள் எடுத்து கூறி மாணவனை கண்டிக்க சொல்ல வேண்டும்.
மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்க கூடாது திருத்த வேண்டும். இது மட்டுமின்றி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் போராட்டத்தில் ஈடுபட கூடாது என கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார். இந்த ஆய்வில் ஆரணி சப்- கலெக்டர் தனலட்சுமி நேர்முக உதவியாளர் பெருமாள் தாசில்தார் ஜெகதீசன். உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.