உள்ளூர் செய்திகள்

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உற்சவமூர்த்திகளுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்ட காட்சி.

மார்கழி பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம்

Published On 2022-12-16 15:23 IST   |   Update On 2022-12-16 15:23:00 IST
  • உற்சவமூர்த்திக்கு வெள்ளிக்கவசம் அணிவிப்பு
  • திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு பூஜை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு கோ பூஜை மற்றும் அருணாசலேஸ்வரர் உண்ணாமலை அம்மனுக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து பெரியநாயக்கர் சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இன்று முதல் மார்கழி மாதம் முழுவதும் அம்மன் சன்னதி முன்பு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல் சொற்பொழிவு நடைபெறும். விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர்.

Tags:    

Similar News