உள்ளூர் செய்திகள்

சேத்துப்பட்டில் பாம்பு பிடிப்போர் ஆய்வகம், பாம்பு பண்ணை

Published On 2023-03-04 15:28 IST   |   Update On 2023-03-04 15:28:00 IST
  • விஷத்தை சேகரித்து தொழில் தொடங்கு வதற்கான ஏற்பாடு
  • கலெக்டர் தொடங்கி ைவத்தார்

சேத்துப்பட்டு:

பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றியம் கெங்காபுரம், கிராமத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாம்பு பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு பாம்பு பிடிப்போர் வாழ்வாதார தொழிற் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை உருவாக்கி செயல்படுத்தி வந்தனர். பின்னர் மாவட்ட தொழில் மையத்தில் பதிவு செய்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மேம்பாட்டு நிதியிலிருந்து 31 லட்சம் கடன் பெற்று பாம்புகளை பிடித்து விஷத்தை சேகரித்து தொழில் தொடங்கு வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

தமிழ்நாடு புதுமை திட்டத்தின் மூலம் 32 லட்சம் கடன் உதவி பெற்று பாம்பு பண்ணை, மற்றும் ஆய்வகம், தொழிற்சங்க கட்டிடம், ஆகியவற்றை அமைத்தனர். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

இதில் கலெக்டர் முருகேஷ், கலந்துகொண்டு தொழிற்சங்க கட்டிடம், பாம்பு பண்ணை, ஆய்வகம், ஆகியவற்றை திறந்து வைத்து. பாம்பு பிடிப்பதற்கான உபகரணங்கள், மற்றும் லைசென்ஸ், ஆகியவற்றை வழங்கினார்.

Tags:    

Similar News