வீடுகள் சீரமைக்கும் பணியை அதிகார் ஆய்வு செய்த காட்சி.
- ரூ.50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு.
- வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தச்சூர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் கடந்த 1998ம் ஆண்டு சமத்துவபுரம் அமைத்து பொதுமக்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டன.
மேலும் தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு சமத்துவபுரம் சீரமைப்பு திட்டத்தின் கீழ் தலா ஓரு வீட்டிற்கு உ இதனால் ஆரணி அருகே உள்ள தச்சூர் ஊராட்சிக்குபட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ள சுமார் 100 வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக சமத்துவபுரத்தில் சங்கம் அமைத்து நிதியை பகிர்ந்து பணியை தொடங்க வேண்டும் என்பது வழக்கம். சமத்துவபுரத்தில் ஒரு தரப்பினர் ஒருதலைபட்சமாக நிர்வாகிகளை தேர்தெடுத்து சங்கம் பதிவு செய்ய முயன்றுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சமத்துவபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருதலைபட்சமாக அமைக்கபட்ட சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக புகார் மனு அளித்தனர்.
மேலும் பொதுமக்களின் புகாரின் பேரில் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலர் திலகவதி மற்றும் அதிகாரிகளுடன் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சமத்துவபுரம் பகுதியில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும்இளைஞர்கள் ஒன்றிணைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்த மனுவை அதிகாரியிடம் வழங்கினார்.
இதில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.