உள்ளூர் செய்திகள்

வந்தவாசியில் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர். 

வந்தவாசியில் கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்

Published On 2022-07-30 14:26 IST   |   Update On 2022-07-30 14:26:00 IST
  • ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அதிரடி நடவடிக்கை
  • 20 கிலோ சிக்கியது

வந்தவாசி:

வந்தவாசி காதர்ஜண்டா தெருவில் உள்ள சிக்கன் பக்கோடா கடை ஒன்றில் சிக்கன் பக்கோடா வாங்கி சாப்பிட்ட மருத்துவர் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் அந்த தெருவில் உள்ள கோழி இறைச்சி விற்பனை மற்றும் சிக்கன் பக்கோடா கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

இதில் தனியார் மருத்துவமனை எதிரில் உள்ள சிக்கன் பக்கோடா கடை ஒன்றில் ப்ரீஸர் பாக்ஸில் சுமார் 20 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த கெட்டுப்போன கோழி இறைச்சியை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

Tags:    

Similar News