உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்தித்த போது எடுத்த படம்.
திருவண்ணாமலையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி மாணவர்கள் சந்திப்பு
- இயற்கை உணவு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
- பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1986- 87-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகள் 36 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலாமாரி தலைமை தாங்கினார். முன்னாள் மாணவ, மாணவிகள் வரவேற்பு அளித்தனர். முன்னாள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக இயற்கை உணவு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பள்ளி கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்களை கவுரவ படுத்துதல் மற்றும் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.