உள்ளூர் செய்திகள்
ரெட்டிபாளையம் ரோட்டில் தாழ்வான மின் கம்பிகளை சீரமைக்க புதிய மின் கம்பம் நடப்பட்டன.
ரோட்டில் தாழ்வான மின் கம்பிகள் சீரமைப்பு
- வாகனங்கள் செல்ல முடியாமல் அவதி
- மின் வாரிய அதிகாரிகளுக்கு மக்கள் பாராட்டு
கண்ணமங்கலம்:
கணணமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் தம்டமலைகோடி மலை செல்லும் வழியில் ரோட்டில் சில இடங்களில் குறுக்கே தாழ்வான நிலையில் மின் கம்பிகள் இருந்தது.
இதனால் அவ்வழியே வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இது குறித்து காட்டுக்காநல்லூர் மின் வாரிய அதிகாரிகளிடம் ஏற்கனவே அப்பகுதி மக்கள் புகார் செய்திருந்தனர்.
மேலும் இது சம்பந்தமாக படங்கள் நேற்று முன்தினம் வாட்ஸ் அப்பில் பரவியதால், மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு நேற்று 9ம்தேதி தாழ்வான நிலையில் இருந்த மின் கம்பிகளை உரிய முறையில் உயர்த்தி கட்ட புதிய மின் கம்பம் நட்டு சீரமைத்தனர்.
மின் வாரிய அதிகாரிகள் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.