ஆக்கிரமிப்பை தாங்களே அகற்றிய வியாபாரிகள்.
ஆக்கிரமிப்பை தாங்களே அகற்றிய வியாபாரிகள்
- ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
- அதிகாரிகள் அளவீடு செய்து அறிவுரை வழங்கினர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதிய சாலை வேலூர் திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடாக இருப்பதால் தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.
ஆனால் புதிய சாலை பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தங்கள் வாகனங்கள் மற்றும் கடையில் விற்பனை செய்து வரும் பொருட்களை நடைபாதையில் வைத்து போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக வருவாய்த்துறை, போலீசார் கடந்த 7-ந்தேதி வியாபாரிகளுக்கு போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் 13-ந்தேதிக்குள் அனைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் நேற்று வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைக்காரர்கள் தங்கள் கடை முன்பு வைத்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அளவீடு செய்து ஆலோசனை வழங்கினர்.
தொடர்ந்து வியாபாரிகள் சிலர் தங்கள் கடையின் நிழலுக்காக போடப்பட்ட தகர ஷீட்டுகள் பிளாஸ்டிக் ஷீட்டுகள் அகற்றினர்.