உள்ளூர் செய்திகள்

பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா

Published On 2022-12-30 15:10 IST   |   Update On 2022-12-30 15:10:00 IST
  • 1000 பேருக்கு அன்ன கூடை வழங்கப்பட்டது
  • திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

செய்யாறு:

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் புளிரம்பாக்கம் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை தாங்கி பேசினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், சேர்மன் நாவல் பாக்கம் பாபு, ஆர். வெங்கடேஷ் பாபு, ராம் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் ஞானவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளர் எம். எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு பேராசிரியரின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும், எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் 1000 அன்ன கூடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், வேல்முருகன், லோகநாதன், நகர மன்ற தலைவர் மோகனவேல், நகர செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், சங்கர், திராவிட முருகன், ரவிக்குமார், பார்த்திபன் மற்றும் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதவல்லி உதயசூரியன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News