உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலம் பகுதியில் பலமணி நேரம் மின்வெட்டு

Published On 2022-07-02 14:10 IST   |   Update On 2022-07-02 14:10:00 IST
  • மழையால் பாதிப்பு.
  • மின்சப்ளை மாற்றி வழங்க பொதுமக்கள் வலியுறுத்தல்.

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பகுதியில் புதிய சாலை மெயின்ரோடு அங்காளம்மன் கோயில் எதிரே உள்ள மின் கம்பங்களில் செல்லும் மின் வயர்களை மின் பணியாளர்கள் நேற்று முன்தினம் மாற்றினர்.

இதன் காரணமாக அப்பகுதியில் காலை 10 மணி அளவில் தடை செய்யப்பட்ட மின்சாரம், மணிக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் வியாபாரிகள் மின் சப்ளை இன்றி அவதிக்குள்ளாகினர்.

மேலும் இரவு நேரத்தில் மழை காரணமாக தடை செய்யப்பட்ட மின்சாரம், இரவு 9 மணி அளவில் வழங்கப்பட்டது. கண்ணமங்கலம் துணை மின் நிலையத்திற்கு (அழகுசேனை சூளைமேடு பகுதியில் உள்ள) சந்தவாசல் 110/11கேவி துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் சந்தவாசல் பகுதியில் மழை பெய்யும் போது மின் தடை செய்யப்பட்டால் மீண்டும் மின் சப்ளை கிடைக்க காலதாமதமாகிறது. எனவே சந்தவாசலில் மின் தடை செய்யும் போது, கண்ணமங்கலம் துணை மின் நிலையத்திற்கு அருகே உள்ள அனந்தபுரம் அல்லது கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையங்கள் வழியாக பேக் அப் எனப்படும் மின் சப்ளை வழங்கிட மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News