உள்ளூர் செய்திகள்
தாழ்வாக செல்லும் மின் கம்பியால் ஊருக்குள் வராமல் செல்லும் பஸ்கள்
- மாணவர்கள், பொதுமக்கள் அவதி
- சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கல்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த இரும்புலி சுற்றிலும் மலை சூழ்ந்த கிராமம் ஆகும். இவ்வூருக்கு வேலூரில் இருந்து ரெட்டிபாளையம் கிராமம் நகர பஸ் இயக்கப்படுகின்றன. ஆனால் இரும்புலி கிராமம் செல்லும் ரோட்டில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கிறது.
இதனை சீரமைக்க பலமுறை அப்பகுதி மக்கள் புகார் செய்தும் மின் வாரியத்தினர் சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் இவ்வூருக்கு வரும் பஸ் வராமல் பாதியிலேயே திரும்பிச் செல்கிறது.
இதனால் இரும்புலி கிராமத்திலிருந்து பொதுமக்கள், மாணவ மாணவிகள் யாரும் எங்குமே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தாழ்வான நிலையில் செல்லும் மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்காவிடில் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.