உள்ளூர் செய்திகள்

ஒண்ணுபுரம் பள்ளியில் மாணவர் மனசு தபால் பெட்டி.

மாணவர்கள் மனசு என்ற பெயரில் குறைகள் தீர்க்க தபால் பெட்டி

Published On 2022-10-26 15:34 IST   |   Update On 2022-10-26 15:34:00 IST
  • மாணவ மாணவிகள் தங்களது குறைகளுக்கு எழுதி போடலாம்
  • ஒண்ணுபுரம் அரசு பள்ளியில் சிறப்பு ஏற்பாடு

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் அரசு மேநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை வாயில் சுவற்றில் மாணவர்கள் மனசு தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தபால் பெட்டி மூலம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களது வகுப்பறையில் உள்ள குறைகள் உள்பட பல்வேறு புகார்களை எழுதி இப்பெட்டியில் போடவேண்டும்.

இதனடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு தங்கள் வகுப்பறையில் பேன், விளக்குகள், பென்ச் ஆகிய பற்றாக்குறை மற்றும் வேறு ஏதாவது புகார்கள் இருந்தாலும் போடலாம். இதன் மூலம் மாணவ மாணவிகள் தங்களது குறைகளுக்கு தீர்வு காணலாம்.

இது சம்பந்தமாக தலைமை ஆசிரியர் பாபுவிடம்,கேட்டபோது, மாணவ மாணவிகளுக்கு தங்கள் வகுப்பறை குறைகளை கூற முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த ஏற்பாடு செய்துள்ளோம்.

சில வகுப்பறைகளில் மின்விசிறி, மின் விளக்குகள் இல்லை என தெரிவித்தால் உடனடியாக சரி செய்ய முடியும். என்றார்.

Tags:    

Similar News