உள்ளூர் செய்திகள்
போளூர் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு
- பதிவேடுகள் வழக்குகள் அதன் விவரங்கள் போன்றவற்றை கேட்டறிந்தார்
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
போளூர்:
திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் நேற்று இரவு 7.20மணி அளவில் போளூர் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய எஸ்.பி. ஆக பொறுப்பேற்றுக் கொண்ட கார்த்திகேயன் கடந்த ஒரு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக போளூர் போலீஸ் நிலையத்தில் திடீரென்று ஆய்வு செய்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அவரை வரவேற்றனர்.
போலீஸ் நிலையத்தில் உள்ள பதிவேடுகள் வழக்குகள் அதன் விவரங்கள் போன்றவற்றை கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார் பொதுமக்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வாகன சோதனை அதிகப்படுத்துவோம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் பொது மக்களுடைய மனுக்களை உடனே விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.