உள்ளூர் செய்திகள்
பிறந்த நாளில் பிளஸ் 2 மாணவி மாயம்
- தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை
- போலீசார் வழக்கு செய்து தேடி வருகின்றனர்
செய்யாறு:
செய்யாறு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஆரணியில் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இவர் தற்போது வெளியான பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார். மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் தனது தாயாரிடம் சென்று நான் ஆரணியில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவதாக கூறினார்.
இதற்கு தாயார் மறுப்பு தெரிவித்து வயல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாணவியின் அண்ணன் பகல் ஒரு மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது தனது தங்கை வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தந்தையிடம் தெரிவித்தார். பின்னர் இது சம்பந்தமாக பெற்றோர் செய்யாறு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
பிறந்தநாளில் மாணவி மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.