பாழடைந்த அரசு கட்டிடத்தில் மூதாட்டிைய தங்க வைத்த பஞ். தலைவர்
- கலெக்டர் எச்சரிக்கை
- முதியோர் இல்லத்தில் சேர்க்க உத்தரவு
ஆரணி:
திருவண்ணாமலை ஆரணி அருகே மருசூர் கிராமத்தில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி முனியம்மாள் என்பவர் ஆதரவின்றி தங்கும் இடம் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
மருசூர் ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ்குமார் துணைதலைவர் ரமேஷ் உள்ளிட்ட மருசூர் ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான பாழடைந்த தொலைக்காட்சி அறையில் மூதாட்டியை தங்க வைத்துள்ளார்.
ஊராட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சி அறை பாழடைந்து மின்சாரம் வசதியின்றி சிதலமடைந்து உள்ளது. அந்த அறை மூதாட்டி தங்கியிருந்ததை கண்டு கலெக்டர் முருகேஷ் அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் மருசூர் ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ்குமார் மற்றும் கிராமநிர்வாக அலுவலர் ஆகியோரிடம் பாழடைந்த அரசு கட்டிடத்தில் எப்படி தங்க வைத்துள்ளீர்கள் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தங்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யபடும் என்று எச்சரித்தார்.
உடனடியாக மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டார்.