உள்ளூர் செய்திகள்
கோவிலில் பூஜைநடந்த காட்சி.
படவேடு ராமநாதபுரம் கோவிலில் பாலாலயம்
- அம்மன் கோயில்கள் தற்போது சிதிலமடைந்து கிடக்கிறது.
- விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ராமநாதபுரம் கிராமத்தில் தற்போது காளியம்மன் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இக்கோயில் பழமையான மாரியம்மன், அன்னபூரணி அம்மன் கோயில்கள் தற்போது சிதிலமடைந்து கிடக்கிறது.
எனவே இக்கோ யிலுகளும் சீரமைத்து புதியதாக கட்ட கிராம மக்கள் முடிவு செய்து, நேற்று 8-ந்தேதி காலை பாலாலய பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கோயில் புனரமைத்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.