- இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள் வழங்கப்பட்டன
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசி புதிய பஸ் நிலைய அணுகுசாலை சந்திப்பு பகுதியில் ஜெ.பேரவை மாவட்டச் செயலாளர் கே.பாஸ்கர் தலைமையில், மருதாடு கிராமத்தில் வந்தவாசி கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் தலைமையிலும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டது.
முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவர் டி.கே.பி.மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் தூசி மோகன் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து பொது மக்களுக்கு மோர், கூழ், இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
விழாவில் நகரச் செயலாளர் எம்.பாஷா, நகர பேரவை செயலாளர் ராஜசேகர், ஒன்றியக்குழு உறுப்பினர் நா.சிவராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் தீபா செந்தில்குமார், அம்பிகா மேகநாதன், ஒன்றிய துணைச் செயலர் பந்தல் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.