உள்ளூர் செய்திகள்
ஒலிம்பிக் சுடர் விழிப்புணர்வு தொடங்கி வைத்த காட்சி.
வந்தவாசியில் ஒலிம்பிக் சுடர் விழிப்புணர்வு பேரணி
- பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டியை முன்னிட்டு நடந்தது
- 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசியில் மாநில அளவிலான தடகள போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெறுவதை யொட்டி விழிப்புணர்வு ஒலிம்பிக் சுடர் பேரணி வந்தவாசியில் நடைபெற்றது.
பேரணியை மாவட்ட துணை போலி சூப்பிரண்டு கார்த்திக் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் திருவண்ணாமலையில் மாநில அளவிலான தடகளப் போட்டி நடைபெற உள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் ஒலிம்பிக் சுடர் கையில் ஏந்தி கொண்டு பேரணியாக சென்றனர்.
இந்தப் பேரணி வந்தவாசி 5 கண் பாலம் அருகே இருந்து தொடங்கி தேரடி பகுதி பஜார் சாலை பழைய பஸ் நிலையம் வழியாக சென்று அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சென்று முடிவடைந்தது.
இந்தப் பேரணியில் வந்தவாசி சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.