உள்ளூர் செய்திகள்

புதிதாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம்

Published On 2022-10-02 14:32 IST   |   Update On 2022-10-02 14:32:00 IST
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

செய்யாறு:

செய்யாறில் புதியதாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் நேற்று தொடங்கப்பட்டது.

செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம், ஆரணி, மேற்கு ஆரணி, வந்தவாசி, தெள்ளார், பெரணமல்லூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட ஒன்பது யூனியன் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி 64 உள்பட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி என 850 பள்ளிகள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும்.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று புதிதாக தொடங்கப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை ஒ. ஜோதி எம்எல்ஏ திறந்து வைத்தார்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஆர்டிஓ ஆர். மந்தாகினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு தலைவர்கள் என். பாபு, டி.ராஜு, திலகவதி ராஜ்குமார், திமுக நகர செயலாளர் கே. விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் என். சங்கர், ஞானவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வழக்கறிஞர் ஜி அசோக், வழக்கறிஞர் பாட்ஷா, நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News