உள்ளூர் செய்திகள்

பொதுக்கூட்டத்தில் ஜோதி எம்.எல்.ஏ. பெண்களுக்கு அன்ன கூடை வழங்கிய போது எடுத்த படம்.

மாற்றுக் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்

Update: 2022-06-30 10:23 GMT
  • 750 பெண்களுக்கு அன்னக் கூடை.
  • ஜோதி எம்.எல்.ஏ வழங்கினார்.

செய்யாறு:

செய்யாறு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாபொதுக்கூட்டம் செய்யாறு அருகே உள்ள வாழ்குடை கிராமத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒ.ஜோதி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

செய்யாறு ஒன்றியக்குழு தலைவர் என். வி. பாபு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஆர். வெங்கடேஷ் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு ஒன்றிய குழு துணை தலைவர் ஆர். வி. பாஸ்கரன் வரவேற்றார்.

தலைமை கழக பேச்சாளர்கள் நாகை நாகராசன், சேலம் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் எம்எல்ஏ ஜோதி 750 பெண்களுக்கு அன்னக் கூடைவழங்கினார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இறுதியாக ஒன்றிய குழு உறுப்பினர் ஞானவேலு நன்றி கூறினார்.

மேலும் கூட்டத்தில் நகர செயலாளர் விஸ்வநாதன், நகர மன்றத் தலைவர் மோகன வேலு, முன்னாள் நகர் செயலாளர் சம்பத், நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் கள் பூங்கொடி பார்த்திபன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News