உள்ளூர் செய்திகள்

கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள இஸ்லாமிய பெண்களிடம் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் குறைகளை கேட்டு மனுக்களை பெற்ற போது எடுத்த படம்.

பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான்

Published On 2022-07-17 14:14 IST   |   Update On 2022-07-17 14:14:00 IST
  • தொழுகையிலும் கலந்து கொண்டார்
  • அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு

திருவண்ணாமலை:

கலசப்பாக்கம் அடுத்த கேட்டவாரம்பாளையம் கிராமத்தில் உள்ள மசூதியில் நேற்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வருகை தந்து ஆய்வு செய்தார். பின்பு அங்கு நடைபெற்ற தொழுகையிலும் கலந்து கொண்டு இஸ்லாமிய மக்களிடையே குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றார்.

பின்னர் இதைத் தொடர்ந்து, காந்தபாளையம், வீரளூர், கீழ்பாலூர், கடலாடி, எர்ணமங்கலம், மோட்டூர், கலசப்பாக்கம், ஆகிய இடங்களில் அங்குள்ள மசூதிகளுக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றனர்.

அப்போது இஸ்லாமியர் மசூதியை அரசாங்கத்தில் சரியான முறையில் பதிவீடு செய்து உள்ளீர்களா? மேலும் அரசு வழங்கும் திட்டங்கள் வருகிறதா இல்லையென்றால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார். அப்போது உடன் கலசப்பாக்கம் தி. பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News