உள்ளூர் செய்திகள்

மும்முனி கிராமத்தில் மனுநீதிநாள் முகாம்

Published On 2022-09-15 10:12 GMT   |   Update On 2022-09-15 10:12 GMT
  • 38 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது
  • 128 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

வந்தவாசி:

வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட தனித்துணை கலெக்டர் கோ.வெங்கடேசன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தாசில்தார்கள் முருகானந்தம், சுபாஷ்சந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 38 பேருக்கு பட்டா மாற்றம், 6 பேருக்கு மின்னனு குடும்ப அட்டை, 73 பேருக்கு முதியோர் மற்றும் இதர உதவித் தொகை, 3 பேருக்கு நத்தம் பட்டா நகல் உள்ளிட்ட 128 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் துணை தாசில்தார் அகத்தீஸ்வரன் வருவாய் ஆய்வாளர் கலைவாணி, மருத்துவர் பூவிதா கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் சுகந்தி வேலு, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News