உள்ளூர் செய்திகள்

கார்த்திகை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

Published On 2022-11-11 15:07 IST   |   Update On 2022-11-11 15:07:00 IST
  • திருவண்ணாமலையில் அடுத்த மாதம் 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது
  • 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள தீபத்திருவிழாவின் நிறைவாக, அடுத்த மாதம் 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படும். 2 ஆண்டுகளுக்கு பிறகு, தீபத்திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற உள்ளது.

எனவே, தீபத்திருவிழாவில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இதுதொடர் பாக, கலெக்டர் தலைமை யில் ஏற்கனவே 2 கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. மேலும், வடக்கு மண்டல ஐஜி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரடி ஆய்வும் செய்யப்பட்டது. அதன்தொடர்ச்சி யாக, தீபத்திருவிழா முன் னேற்பாடுகள் குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆகியோர் அடுத்த வாரம் நேரடி ஆய்வு நடத்ததிட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா வரும் வாகனங்கள் அனைத்தும் சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.சுவாமி திருவீதி யுலா வாகனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்ததால், அவற்றைசீரமைத்து புது வண்ணம் தீட்டப்படு கிறது. வாகனங்களின் உறு தித்தன்மையை மீண்டும் சரிபார்க்கப்படுகிறது.

அதன்படி, தீபத்திரு விழாவின் 6ம் நாளான்று காலை உற்சவத்தின்போது மாட வீதியில் 63 நாயன்மார்கள் திருவீதியுலா நடைபெறும். நாயன்மார்கள் வீதியுலாவுக்கு மார்கள் வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் 63 வாகனங்களையும் புதுப் பித்து, வண்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விழாவின் 7ம் நாளான்று மாட வீதியில் வலம் வரும் பஞ்ச ரதங் களும் ஏற்கனவே சீரமைக் கப்பட்டு, அந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. குறிப்பாக, சுப் பிரமணியர் தேர் முற்றிலுமாக பழுதுபார்க்கப்பட் டுள்ளன.

தேர் பீடத்தின் மேற்பகுதி முழுவதும் புதியதாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. எனவே, சுப் பிரமணியர் தேர் மட்டும் விரைவில் வெள்ளோட் டம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News