உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

கண்ணமங்கலம் கூட்ரோட்டில் பெரிய நிழற்குடை அமைக்க வேண்டும்

Published On 2022-06-15 14:41 IST   |   Update On 2022-06-15 14:41:00 IST
  • பொதுமக்கள் வலியுறுத்தல்
  • பயணிகள் வெயில், மழையில் தவிக்கும் நிலை உள்ளது.

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் கூட்ரோடு பஸ் நிறுத்தம் மும்முனை பஸ் வருவதால் தினமும் ஏராளமான பயணிகள் நின்று பயணம் செய்து வருகின்றனர்.

ஆனால் இங்கு வரும் பயணிகள் அனைவரும் வெயிலிலும், மழையாலும் தவிக்கும் நிலை உள்ளது. ஏனெனில் பயணிகள் வசதிக்காக பேருந்து நிழற்குடை வசதி இல்லை. கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, மழையில் நனைந்தாலும் பயணிகள் காத்திருந்து பஸ் பிடித்து சென்று வருகின்றனர்.

இவ்வழியே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. எனவே மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இங்கு பயணிகள் வசதிக்காக பெரிய அளவில் பஸ் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும் என பயணிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News