உள்ளூர் செய்திகள்

சாலையில் தாழ்வான நிலையில் உள்ள மின் கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தல்

Published On 2022-07-09 15:48 IST   |   Update On 2022-07-09 15:48:00 IST
  • மின் கம்பிகள் உரசுவதால் மின்சாரம் தாக்கும் ஆபத்து உள்ளது
  • அதிகாரிகள் சீரமைக்க வலியுறுத்தல்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் தம்டமலைகோடி மலை முருகர் கோயிலுக்கு செல்லும் சாலை உள்ளது.

இந்த தாழ்வான நிலையில் மின் கம்பங்கள் வழியாக மின் கம்பிகள் உள்ளது. இவ்வழியே தினமும் பள்ளி பேருந்துகள், அறுவடை இயந்திரங்கள் சென்று வருகின்றன. அப்போது உயரமான வாகனங்களில் மின் கம்பிகள் உரசுவதால் மின்சாரம் தாக்கும் ஆபத்து உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக காட்டுக்காநல்லூர் மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் இன்னும் மின் கம்பிகளை உரிய முறையில் உயர்த்தி கட்ட வில்லை.

எனவே இந்த மின் கம்பிகளை உரிய முறையில் மின் வாரிய அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News